அரசு ஊழியர் சங்க கூட்டம்
சங்கராபுரத்தில் அரசு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது.
சங்கராபுரம்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் காஞ்சனாமேரி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பாசில், பொருளாளர் பாலமுருகன், நிர்வாகிகள் ஏசுமணி, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட துணை தலைவர் செந்தில்முருகன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ரவி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டதலைவர் வேலு, மாவட்ட செயலாளர் விஜயா, நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிதுரை, சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக தமிழகஅரசு நிறைவேற்ற வேண்டும், கரும்பு விவசாயிகளின் நலனுக்காக திருவண்ணாமலையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.