அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
x

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் இன்று திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார்.

அதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகா்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொது விநியோக முறையை சீர்படுத்திட வேண்டும்.

அனைத்துத் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரேத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதில் அரசு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story