அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம்


அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம்
x

அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் சார்பில் நேற்று மாலை கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் முருகானந்தம், மாவட்ட பொருளாளர் பிச்சைபிள்ளை, மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கவேண்டும், பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் நியாயவிலை கடை, டாஸ்மாக், சாலை பணியாளர்கள், ஊராட்சி களப்பணியாளர்கள், பட்டுவளர்ச்சித்துறை தினக்கூலி பணியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story