சத்தியமங்கலத்தில் தாய்ப்பால் வார விழா


சத்தியமங்கலத்தில் தாய்ப்பால் வார விழா
x

சத்தியமங்கலத்தில் தாய்ப்பால் வார விழா

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் தாய்ப்பால் வார விழாவையொட்டி சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் பூங்கோதை கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். தாய் மற்றும் குழந்தை உண்ண வேண்டிய காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானிய உணவுகள், சத்து மாவினால் செய்யப்பட்ட பலகாரங்கள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

டாக்டர் சந்தியா தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி பேசினார். மேலும் புட்டி பாலினால் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமைகளை பற்றியும் கூறப்பட்டது. இந்த விழாவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உஷாராணி, தமிழ்ச்செல்வி மற்றும் கண்காணிப்பாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story