திருப்பத்தூரில் அரசு மாதிரி பள்ளி தொடக்கம்
திருப்பத்தூரில் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டது.
திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி பள்ளி (உண்டு உறைவிட பள்ளி) தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மாதிரி பள்ளியை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி. அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி எல்லா மாணவர்களும் ஆக்கப்பூர்வமான அறிவுத்திறன் கிடைக்க வேண்டும் என்று கல்வி மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்த விளங்க வேண்டும் என்று அரசு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு வருவது சிரமமாக இருக்கும், என்பதற்காக இந்த மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் அளித்து மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாய்பினை நல்லமுறையில் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால்வள தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜாஅண்ணாமலை, நகரமன்ற தலைவர் சங்கீதாவெங்கடேஷ், ஒன்றியக்குழு தலைவர் விஜயாஅருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.