காட்பாடி சேர்க்காட்டில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்


காட்பாடி சேர்க்காட்டில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
x

காட்பாடி சேர்க்காட்டில் 6 ஏக்கரில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூர்

காட்பாடி சேர்க்காட்டில் 6 ஏக்கரில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

24 பணிகள் நிறைவு

ஓராண்டில் வேலூர் மாவட்டத்திற்கு செய்த திட்டங்கள் என்ன என்று அதிகாரியிடம் கேட்டேன். அப்போது ஒரு புத்தகம் கையில் கொடுத்தார்கள் அந்த அளவிற்கு வேலூருக்கு பல்வே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்று திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதை செய்ததால் தான் தற்போது உங்கள் முன்பு கம்பீரமாக நிற்கிறேன்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.963 கோடியில் 52 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 24 பணிகள் ரூ.334 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பேருராட்சியில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பேரணாம்பட்டு சாலை பணியும் நடைபெற்று வருகிறது. வடுகந்தாங்கல் பகுதியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. 12 புதிய பால் உற்பதியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 704 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.61 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. 7,340 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

7897 மனுக்களுக்கு தீர்வு

வேலூர் மாவட்டத்தில் 4,467 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 16 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.50 லட்சம் மூல நிதி வழங்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் மூலம் 7,897 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12,415 தகுதிவாய்ந்த நபர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். 1,915 உழவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. பல ஹெக்டேர் கணக்கில் ஆக்கிரமிப்பு நிலங்கள் அகற்றப்பட்டுள்ளது.

அகரம் ஆற்றின் குறுக்கே கோவிந்தம்பாடி கிராமத்தில் தடுப்பணை, பாலாற்றின் குறுக்கே பொய்கை கிராமத்தில் தடுப்பணை, சேண்பாக்கத்தில் தரைகீழ் தடுப்பணை, பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம், குகையநல்லூர் கிராமத்தில் தடுப்பணை என ரூ.58 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் 9 ஏரிகளை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சிப்காட் அமைக்கப்படும்

மலை கிராமத்திற்கு தார்சாலை, தொரப்பாடி, பத்தலப்பல்லியில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

நீர்வளத்துறை அமைச்சர் கேட்டதற்காக காட்பாடி மகிமண்டலத்தில் 300 ஏக்கரில் சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

மேல்மொணவூர், அப்துல்லாபுரம் கிராம பகுதியில் 5 ஏக்கரில் டைட்டல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புறவழிச்சாலை

குடியாத்தம் புறவழிச்சாலை 7 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.228 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

வேலூர் வட்டச்சாலை 9 கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.328 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தற்போது நில எடுப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

வேலூர் புறவழிச்சாலை சுமார் ரூ.220 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

காட்பாடி காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரி பகுதிக்கு பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

பல்நோக்கு மருத்துவமனை

காட்பாடி சேர்க்காட்டில் 6 ஏக்கரில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். அங்கு 6 ஏக்கரில் புதிய அரசு கலை கல்லூரியும் கட்டப்படும்.

வல்லம் மற்றும் கீழ்பள்ளிக்குப்பம் இடையே ரெயில்வே மேம்பாலம் ரூ.181 கோடியில் அமைக்கப்பட உள்ளது.

அணைக்கட்டு தொகுதியில் உள்ள 73 மலை கிராமங்களில் சுமார் 18 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு ரூ.34 கோடியில் தரமான தார் சாலைகள் அமைக்கப்படும். அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் மழை காலங்களில் சாலை துண்டிக்கப்படும் கிராமங்களில் ரூ.14 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள விரிஞ்சிபுரம் - கீழ்மொணவூர் பகுதியில் பாலாற்று வெள்ள சேதத்தை தடுக்க ரூ.7 கோடியில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story