அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அரசு ரப்பர் கழகம்

அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 17-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் தொழிலாளர்கள் ரப்பர் கழக கோட்ட மேலாளர்கள் அலுவலகங்கள் முன்பு தொடர் ஆர்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதல் சிற்றாறு, கோதையாறு, மணலோடை மற்றும் கீரிப்பாறை கோட்ட மேலாளர்கள் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் முடிவைக் கைவிட்டு, கோட்ட மேலாளர் அலுவலகங்கள் முன்பு வழக்கம் போல் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தொழிலாளர்களின் ஊதிய கோரிக்கைக்கு தீர்வு கண்டு, வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story