அரசு பள்ளி மாணவிகள் பேரணி
பேட்டையில் அரசு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
திருநெல்வேலி
பேட்டை:
பேட்டை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை தங்கத்தாய் வரவேற்றார். பேரணியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய படி மாணவிகள் பேட்டையில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். நிகழ்ச்சியில் வட்டார வளமைய ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story