தேசிய கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி:நரிப்பள்ளி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு


தேசிய கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி:நரிப்பள்ளி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 16 Oct 2023 12:30 AM IST (Updated: 16 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெற்ற நரிப்பள்ளி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரூர்:

இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய அளவிலான பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான மாணவிகள் தேர்வு போட்டி திருப்பத்தூரில் கடந்த வாரம் நடந்தது. இதில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவிகள் ஜமுனா, பேபி ஷாலினி, தமிழரசி, சுவாதி ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில் திறமையை வெளிப்படுத்திய 4 மாணவிகளும் தேசிய பெண்கள் அணியில் விளையாட தகுதி பெற்றனர். இதன் மூலம் அடுத்த மாதம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். தேசிய அணிக்கு தகுதி பெற்ற மாணவிகள் மற்றும் அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனர் யோகராஜ், உடற்கல்வி ஆசிரியர் லட்சுமணன் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியை சகுந்தலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன், பொருளாளர் சிற்றரசு மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


Next Story