அரசு பள்ளயில் அறிவியல் திருவிழா
முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளயில் அறிவியல் திருவிழா
தில்லைவிளாகம்:
முத்துப்பேட்டை தாலுகா ஜாம்பவானோடை வடகாடு தொடக்கப்பள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி இணைந்து நடத்தும் ஆயிரமாவது அறிவியல் திருவிழா பயிற்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் கண்ணன், உதவி ஆசிரியர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மகாலட்சுமி குத்து விளக்கு ஏற்றி வைத்தார். பயிற்சியில் பல்வேறு அறிவியல் செயல்பாடுகள், கணித செயல்பாடுகள், காகித மடிப்புகலை, பாடல்கள், நடனம், மேஜிக், கைரேகை, ஓவியங்கள், உள்ளூர் வளங்களைக் கொண்டு மாணவர்கள் படமாக வரைதல் போன்றவை செய்து காட்டப்பட்டன. பயிற்சியின் முதன்மை கருத்தாளராக வானவில் மன்றத்தின் லாவண்யா மற்றும் இல்லம் தேடி கல்வி மையத்தின் தன்னார்வலர்கள் மங்கை, கல்பனா ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.