விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்:-
காவேரிப்பட்டணம் ஒன்றியம் கரகூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சரக அளவில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் செட்டிமாரம்பட்டி அரசு பள்ளி மாணவிகள் கபடி போட்டியில் கலந்து கொண்டு 2-வது இடத்தை பிடித்தனர்.
மேலும் சரக அளவிலான தடகள போட்டிகள் கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 100 மீட்டர் ஓட்ட போட்டியில் மாணவி ஸ்ரீவித்யா 3-ம் இடமும், 200 மீட்டர் ஓட்ட போட்டியில் மாணவர் ராஜ்குமார் 2-ம் இடமும் பிடித்தனர். இந்த சாதனை மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னசாமி, உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story