அரசு பள்ளி மாணவ- மாணவிகள் வெற்றி பெற்று சாதனை
மாவட்ட அளவிலான கையுந்துபந்து போட்டியில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வேலூர் மாவட்ட கையுந்துபந்து சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையே 2-ம் ஆண்டு வேலூர் கோட்டை சாம்பியன்ஷிப் போட்டி காட்பாடி வி.ஐ.டி.யில் நடந்தது. போட்டியில் 32 மாணவர்கள் அணியும், 7 மாணவிகள் அணியும் பங்கு பெற்றன. இப்போட்டியில் பெருமுகை அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கோப்பையை வென்றனர். ஆட்டநாயகன் விருது மாணவன் தயசங்கருக்கு வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் விருபாட்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவி பவித்ரா ஆட்டநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
பரிசளிப்பு விழாவுக்கு கையுந்து பந்து சங்கத்தின் சேர்மேனும், வி.ஐ.டி.துணை தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் தியாகசந்தன், துணைத் தலைவர் வினோத்குமார், செயலாளர் லட்சுமணன், பொருளாளர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஜி.வி.செல்வம் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.