திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி


திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திறனாய்வு தேர்வில் அயன் குறும்பலாபேரி அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

மாநில அளவிலான ஊரக திறனாய்வு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தில் 108 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றள்ளனர். இதில் அயன் குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களான தீபக்குமார், மாதவநாத், மகிமா, நிவேதா, உமாபாரதி, நந்தினி ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இந்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்சிங் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பாராட்டினர்.



Next Story