கலைத்திருவிழா போட்டியில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை


கலைத்திருவிழா போட்டியில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை
x

திண்டுக்கல் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன. இதில் வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும், வெற்றி பெற்ற அணிகளும் பங்கேற்றன. அதன்படி, ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.

அதில் தெருக்கூத்து நாடகம் பிரிவில் மாணவிகள் அணி, கவின்கலை பிரிவில் மாணவன் வெள்ளைச்சாமி, நுண்கலை பிரிவில் மாணவன் சிவமணி ஆகியோர் முதலிடம் பிடித்து அசத்தினர். இவர்கள் அனைவரும் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் நடனம், கவிதை புனைதல், வீதிநாடகம், ஓவியம், பாவனை நடிப்பு போன்ற பிரிவுகளில் 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை பள்ளித் தலைமையாசிரியை நிர்மலா, உதவித்தலைமை ஆசிரியர்கள் காளிமுத்து, முத்துராமலிங்கம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.


Next Story