நீச்சல் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
நீச்சல் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
வி.ஐ.டி.யில் நடந்த மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் காட்பாடி தாலுகா பொன்னையை அடுத்த வள்ளிமலை மேல்நிலை ப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவன் மதன், பிளஸ்-1 மாணவன் கவுதம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மாணவன் மதன் 50 மீட்டர் பின்னோக்கி நீச்சல் போட்டியில் முதலிடமும், 200 மீட்டர் முன்னோக்கி நீச்சல் செய்யும் போட்டியில் முதலிடமும் பெற்று வெற்றி பெற்றான். மாணவன் கவுதம் 50 மீட்டர் பின்னோக்கி நீச்சல் போட்டியில் முதலிடமும், 200 மீட்டர் முன்னோக்கி நீச்சல் போட்டியில் இரண்டாம் இடமும் பிடித்தார்.
அவர்களை காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன் பாராட்டி ஊக்கத் தொகை, நீச்சல் போட்டிக்கான உபகரணங்கள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரவேல், பொன்னை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ரவி, பள்ளி ஆசிரியர்கள் கஜராஜா, பழனி, உடற்கல்வி ஆசிரியை ஜெயந்தி ஆகியோரும் மாணவர்களை பாராட்டினர்.