அரசு பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை


அரசு பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை
x

அரசு பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

அரியலூர்

அரியலூர் பெரியார் அரண்மனை தெருவில் வசிப்பவர் கணேசன். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 38). இவர் சிறுவலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் குடும்பத்தகராறு காரணமாக கார்த்திகேயன் விஷம் குடித்தார். இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story