அரசு ஊழியர்கள் தர்ணா


அரசு ஊழியர்கள் தர்ணா
x

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்,

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் செல்வி வரவேற்றார். இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் ஜெயபால், போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ரெங்கசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.தர்ணா போராட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்விடுப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.போராட்டத்தை மாநில செயலாளர் ஹேமலதா நிறைவு செய்து பேசினார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story