ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்


ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x

திருவையாறில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

திருவையாறு;

புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிலுவைத்தொகை, சரண்டர் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவையாறு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் மற்றும் அனைத்து துறை அரசு ஊழியர் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மேலும் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்ட துணைத்தலைவர் ஜெயாசக்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story