தூத்துக்குடிக்கு சனிக்கிழமை கவர்னர் ஆர்.என்.ரவி வருகை


தூத்துக்குடிக்கு சனிக்கிழமை கவர்னர் ஆர்.என்.ரவி வருகை
x

தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களில் 2 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) காலை தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் வ.உ.சியின் 150-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களில் 2 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) காலை தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் வ.உ.சியின் 150-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.

கவர்னர் வருகை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அவரை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் வரவேற்கின்றனர்.

வ.உ.சி. பிறந்தநாள் விழா

பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர் அங்கு 11.55 மணி வரை ஓய்வெடுக்கிறார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு செல்லும் அவர், அங்கு பகல் 12 மணிக்கு நடைபெறும் வ.உ.சி. 150-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்.

விவேகானந்தா கேந்திரா சார்பில் நடைபெறும் இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், பத்மஸ்ரீ விருது பெற்ற ஷோகோ கார்பரேசன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடத்தலைவர் சுவாமி விமூர்தானந்தா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர துணைத்தலைவர் சகோதரி நிவேதிதா உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழாவில் வ.உ.சி. குறித்த புத்தகத்தை வெளியிட்டு, பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவர்னர் பேசுகிறார்.

நெல்லை

இந்த விழாவை முடித்துக் கொண்டு அவர் பகல் 12.45 மணிக்கு நெல்லை புறப்பட்டுச் செல்கிறார். நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவை முடிக்கும் அவர், அங்கு மாலை 3.30 மணி வரை ஓய்வெடுக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தென்காசி மாவட்டம் செல்லும் அவர் அங்கு சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.15 மணிக்கு அவர் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் கவர்னர் மாலை 3.45 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

கவர்னர் வருகையை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


Next Story