கவர்னர் ஆர்.என்.ரவி வருகை


கவர்னர் ஆர்.என்.ரவி வருகை
x

ராஜபாளையத்தில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி வருகிறார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மற்றும் ராஜபாளையத்தில் உள்ள கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ராஜபாளையம் சென்றார்.

இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்குள்ள ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ராஜபாளையம் செல்லும் அவர், காலை 11 மணிக்கு ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் நடை பெறும் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து சிவகாசிக்கு செல்கிறார்.

மாலை 4 மணி அளவில், சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெறும் 60-வது ஆண்டு கல்லூரி விழாவில் பேசுகிறார்.

அதை தொடர்ந்து மதுரை விமான நிலையம் வரும் அவர், விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். கவர்னர் வருகையையொட்டி சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story