பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து...!


பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து...!
x
தினத்தந்தி 24 Jun 2023 8:26 AM IST (Updated: 24 Jun 2023 8:38 AM IST)
t-max-icont-min-icon

பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு வர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

2023-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் விருதுகளில் 'ஆதனின்பொம்மை' நாவலுக்காக பாலபுரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் திரு.உதயசங்கர் அவர்களுக்கும், 'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்பிற்காக யுவபுரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் திரு.ராம் தங்கம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகச் சிறப்பான தமிழ் இலக்கிய படைப்புகளை படைத்து தென் தமிழகத்திலிருந்து விருதிற்கு தேர்வாகியிருக்கும் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story