டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிட கோரி வணிகவரித்துறை அதிகாரியிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு மனு


டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிட கோரி வணிகவரித்துறை அதிகாரியிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு மனு
x

டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிட கோரி வணிகவரித்துறை அதிகாரியிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு மனு அளித்தனர்.

திருச்சி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, பேரமைப்பு நிர்வாகிகளுடன் நேற்று காலை திருச்சி கோர்ட்டு வளாகத்தில் உள்ள வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு இணை ஆணையர் சுவாமிநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், "தமிழகத்தில் அண்மைக்காலமாக வணிகவரித்துறையினர் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் கடைகளுக்கு சென்று தாங்களே பொருட்களை வாங்கி பின்னர் அதற்குரிய வரி செலுத்தாமல் விற்பனை செய்யப்படுகிறது என குற்றம் சாட்டி வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர்.

வணிகர்கள் குறிப்பாக சில்லறை வணிகர்கள் ஏற்கனவே வரி செலுத்தப்பட்ட பொருட்களைத்தான் வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். இந்தநிலையில் வரி செலுத்தப்படவில்லை எனக்கூறி அபராதம் விதிப்பது வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலாகும். ஆகவே வணிகர்களை பாதிக்கும் டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை கைவிட வேண்டும்" என்று கூறி இருந்தார். அப்போது பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு கூறும்போது, தமிழகம் முழுவதும் வணிகவரித்துறையினர் டெஸ்ட் பர்சேஸ் முறையை கையாண்டு வருகிறார்கள். இதை திரும்ப பெறக்கோரி பேரமைப்பு சார்பில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வணிகவரித்துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். டெஸ்ட் பர்சேஸ் உருவாக்கப்பட்டால் வணிகத்துறையே அழிந்துவிடும். இதற்கு அதிகாரிகள் துணை போக கூடாது. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதை அதிகாரிகள் கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.

இனி டெஸ்ட் பர்சேஸ் எங்கும் செல்லக்கூடாது. அவ்வாறு எந்த அதிகாரியாவது டெஸ்ட் பர்சேஸ்க்கு சென்றால் கடையின் சாவியை பூட்டி அதிகாரியிடம் கொடுத்துவிடுவோம். மேலும், இன்னும் ஓரிரு தினங்களில் முதல்-அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டு நிரந்தர தீர்வு காணுவோம். திருச்சி மாவட்டத்தில் 166 பேரிடம் இதுவரை அபராதம் வசூலித்து இருக்கிறார்கள். ஒரு கடைக்கு திடீரென சென்று பொருளை வாங்கிவிட்டு பில் போடவில்லை என்று ரூ.20 ஆயிரம் உடனடி அபராதம் விதிப்பார்கள். அந்த கடையில் விற்பனைக்கு வைத்துள்ள மொத்த பொருட்களே அந்த தொகைக்கு இருக்காது என்றார்.


Related Tags :
Next Story