கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்வணிகவியல் மன்ற கூட்டம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் மன்ற கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் வணிகவியல் துறை பிரிவு 1-ன் சார்பாக மன்ற கூட்டம் 'உன்னை நீ நம்பு' என்ற தலைப்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். வணிகவியல் மன்ற மாணவ செயலர் டப்னி மோனிஸ் வரவேற்றார்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி வணிக மேலாண்மை துறை உதவி பேராசிரியை கோ.மெர்லின் சித்ரா செல்வி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவிகள் தன்னம்பிக்கை, நேர்மை, கடின உழைப்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார். வணிகவியல் துறை மாணவி ஜஸ்மின் ரூபினா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர் கமலச்செல்வி வழிகாட்டுதலின்படி மன்ற செயலர் ஷீலா ஜெபஸ்டா மற்றும் அனைத்து பேராசிரியர்களும் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story