கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்தொழில் முனைவர் மேம்பாடு கருத்தரங்கம்


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்தொழில் முனைவர் மேம்பாடு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தொழில் முனைவர் மேம்பாடு கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புத்தாக்க நிறுவனம் மற்றும் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமும் இணைந்து தொழில் முனைவர் மேம்பாடு கருத்தரங்கம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ரேணுகா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தின் துணை இயக்குனர் அகிலா, தொழில் முனைவோருக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும், புதிய நிறுவனத்தை பதிவு செய்யும் நடைமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார்.

துணை இயக்குனர் ஜெரினா தொழில் முனைவோருக்கான நிதி உதவிகள் குறித்தும், கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரி பேராசிரியர் செல்லத்துரை கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது குறித்தும், இந்து அறநிலையத் துறையின் கண்காணிப்பாளர் சக்திகுமார் சட்டப்பூர்வ பதிவு முறைகள், ஜி.எஸ்.டி, இ.எஸ்.ஐ, இ.பி.எப், இ.பி.எஸ் பெறுவது குறித்தும் விளக்கமாக பேசினர்.

இந்த கருத்தரங்கு கல்லூரி மாணவியரிடையே சுயதொழில் தொடங்குவதை தூண்டும் விதத்திலும், மாணவிகளின் கண்டு பிடிப்புகளையும், தொழில் திட்டங்களையும், கனவுகளையும் மெய்ப்படுத்தும் வகையிலும் நடந்தது. இதில், கல்லூரி பேராசிரியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு மாணவிகளும், முன்னாள் மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனனர்.

முடிவில் தொழில் முனைவோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தெய்வவீரலெட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தொழில் முனைவோர் மன்ற உறுப்பினர்களான பேராசிரியைகள் தமிழ்செல்வி, கமலச்செல்வி, ஜெயந்தி, பவானி, மற்றும் செல்லபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story