கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு தீயணைப்பு மீட்பு பயிற்சி


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு தீயணைப்பு மீட்பு பயிற்சி
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 3:10 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு தீயணைப்பு மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டுநல பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் ஆகியவை இணைந்து கல்லூரி வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிற்சி முகாமை நடத்தின. முகாமிற்கு கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி கலந்து கொண்டு, தீ அபாயம் ஏற்படும் விதங்கள், தீ பரவும் முறைகள், அதனை தடுக்கும் விதங்கள் பற்றி மாணவிகளிடம் விளக்கி கூறினார். மேலும், தீயணைப்பு வீரர்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், சேகர், பாலகிருஷ்ணன், மாரி ஆனந்தராஜ், விநாயக மூர்த்தி சுதாகர், கரோல் ஜோசப் ஆகியோர் மாணவிகளுக்கு மீட்பு பணிகள் பற்றிய செய்முறை விளக்க பயிற்சி அளித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டுநல பணி திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story