கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்  பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பாக பிளஸ்-2 மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை மாவட்ட தணிக்கை கண்காணிப்பாளர் சக்திகுமார் கலந்து கொண்டு பேசினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ரேணுகா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அனிதா குமரன் பதின்ம மேல்நிலைப்பள்ளி, காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மேல்நிலைப்பள்ளி, கமலாவதி மேல்நிலைப்பள்ளி, கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி, நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேஷர் மேல்நிலைப்பள்ளி, கொம்மடிக்கோட்டை ஸ்ரீகாஞ்சி சங்கர பகவதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இவர்களுக்கு கட்டுரை, கரிக்கோல் ஓவியம், கழிவுகளில் இருந்து கலைப்பொருட்கள் உண்டாக்குதல், வினாடி-வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியை தெய்வவீரலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறை பேராசிரியைகள் விஜயலட்சுமி, பார்கவி, செல்லப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர். மாணவிகள் நர்மதா, ஐஸ்வர்யா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

இதேபோல் கல்லூரி விலங்கியல் துறை பேரவை கூட்டம் நடந்தது. பேரவை செயலா் சுஜாதா வரவேற்றார். கல்லூரி வேதியியல் துறை தலைவர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஏற்பாடுகளை விலங்கியல் துறை தலைவர் குமுதா மற்றும் பேராசிரியைகள் செய்திருந்தனர். மாணவி மோனிக் ரெபிஸா நன்றி கூறினார்.

கல்லூரி வணிகவியல் மன்ற கூட்டத்தில், உதவி பேராசிரியை அர்ச்சனா வரவேற்று பேசினார். நாகர்கோவில் முதன்மை கல்வி அலுவலக புள்ளியியல் அலுவலர் டல்லஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். துறை தலைவி தமிழ்ச்செல்வி, உதவி பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி சமிர்தா மனோ நன்றி கூறினார்.

கல்லூரி இயற்பியல் துறை மன்ற கூட்டத்தில் போப்ஸ் கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ஜீவாராணிதங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். துறை மாணவியர் செயலர் இஷா சடேசி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறை தலைவர் ஜாக்குலின் அமிலியா, மன்ற செயலர் உஷா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story