மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் சாதனை
மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
கரூர்
கரூரில் தமிழ்நாடு அமைச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவி சினேகா 65 கிலோ எடை பிரிவில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கத்தையும், மாணவி மகுடேஸ்வரி 50 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், மாணவி கிருத்திகா 55 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
இதேபோன்று மாணவர் மனோஜ் 55 கிலோ எடை பிரிவில் வெற்றி பெற்று வெண்கல பதக்கமும் வென்றார். இதையடுத்து மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற கலைக்கல்லூரி மாணவ- மாணவிகளை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், அனைத்துத்துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story