அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
x

திருப்பத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல்நாளில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 2-ந் தேதி பி.காம், சி.ஏ., 3-ந் தேதி மொழிப்பாட பிரிவுகளான பி.ஏ தமிழ், ஆங்கிலம் ஆகிய பாட பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மேலும் மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து தகவல்களும் http://www.gasctpt.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் அவர்களுக்கு உரிய தேதியில் சேர்க்கைக்கு உரிய அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் கல்லூரிக்கு நேரடியாக வரவேண்டும். தேர்வு பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கலந்தாய்விற்கு வராத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் தரவரிசைப்படி நிரப்பப்படுவர். காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு சேர்க்கை உறுதி செய்யப்படமாட்டாது.

இத்தகவலை கல்லூரி முதல்வர் பெ.சீனுவாசகுமரன் தெரிவித்துள்ளார்.


Next Story