அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு இடம் தேர்வு
நாட்டறம்பள்ளி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை உதவி கலெக்டர்் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள பச்சூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட முதல் கட்டமாக நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் இடம்தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தை திருப்பத்தூர் உதவி கலெக்டர் பானு, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் வருவாய்த் துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சந்திப், கிராம உதவியாளர் மீனா மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story