அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்


அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்
x

அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் மாற்றுத்திறனாளியை அரசு பஸ்சில் இருந்து இறக்கி விட்ட கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மாற்றுத்திறனாளி

திருப்பூர் வலையங்காட்டை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 50). பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன் தினம் திருப்பூர் வீரபாண்டியில் இருந்து பழைய பஸ் நிலையத்துக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் சென்றனர். சத்தியராஜ் மாற்றுத்திறனாளிக்கான தனது இலவச பஸ் பயண அட்டையை கண்டக்டர் முத்துக்குமாரிடம் காண்பித்தார். அவரது மனைவி பெண்களுக்கான இலவச பயண திட்டத்தில் பயணிக்க முடியும் என்பதால் மாற்றுத்திறனாளியான தனக்கு உதவியாளராக தனது மகனை இலவச பயணத்துக்கு அனுமதிக்க சத்தியராஜ் கேட்டார்.

ஆனால் சத்தியராஜ் மற்றும் அவரது மனைவிக்கு மட்டுமே இலவச பயணத்துக்கு அனுமதிக்க முடியும் என்றும், அவருடைய மகனுக்கு பணம் கொடுத்து டிக்கெட் எடுக்குமாறும் கண்டக்டர் கூறியுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை சத்தியராஜின் மகன் செல்போனில் பதிவு செய்துள்ளார். மேலும் சத்தியராஜ், அவருடைய மனைவி, மகன் ஆகியோரை பஸ்சில் இருந்து பாதி வழியில் இறக்கி விட்டதாக தெரிகிறது.

பணியிடை நீக்கம்

இதுகுறித்து சத்தியராஜ் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ பகிரப்பட்டது. இந்தநிலையில் கண்டக்டர் முத்துக்குமாரை பணியிடைநீக்கம் செய்து திருப்பூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நேற்று நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அவர் மீது துறைரீதியான விசாரணையும் நடப்பதாக தெரிவித்தனர்.


Next Story