எந்தவொரு புகையிலை தயாரிப்பும் மக்களுக்கு தீங்கு என கண்டறியப்பட்டால் அரசு தடை விதிக்கலாம் - சென்னை ஐகோர்ட்டு


எந்தவொரு புகையிலை தயாரிப்பும் மக்களுக்கு தீங்கு என கண்டறியப்பட்டால் அரசு தடை விதிக்கலாம்  - சென்னை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 11 May 2023 2:21 PM IST (Updated: 11 May 2023 2:23 PM IST)
t-max-icont-min-icon

எந்தவொரு புகையிலை தயாரிப்பும் மக்களுக்கு தீங்கு என கண்டறியப்பட்டால் அரசு தடை விதிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

சென்னை,

சென்னையை சேர்ந்த ஓர் தனியார் நிறுவனம் அரசு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். தாங்கள் புகையிலை பொருட்கள் இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருவதாகவும், உணவு பொருள் பாதுக்காப்பு சட்டத்தின் கீழ் அரசு புகையிலை இறக்குமதியை தடுக்க நடவடிக்கை எடுக்க கூடாது என கோரி இருந்தனர்.

இந்த வழக்கு விசரணையின் போது, ஏற்கனவே இரட்டை நீதிபதி அமர்வு உத்தரவை சுட்டிக்காட்டி, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் புகையிலை அளவு (நிகோடின்) இருந்தால் அதனை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு எனவும் அதன் மீதான தடை உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரமும் உண்டு என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது.

ஹான்சில் 1.8 % நிகோடின் உள்ளது. மக்களின் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனுமதிக்க முடியாது என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. தொழில் மேற்கொள்ள அடிப்படை உரிமை இருந்தாலும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டது என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.


Next Story