அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்


அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
x

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடிய நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசாணை கடந்த 2019-ல் வெளியானதாகவும், அது தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் அரசு நிர்ணயித்துள்ள தகுதி அடிப்படையில் தகுதி இருந்தும் தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story