பூட்டியிருக்கும் இ-சேவை மையத்தால் பாதிப்பு


பூட்டியிருக்கும் இ-சேவை மையத்தால் பாதிப்பு
x

பூட்டியிருக்கும் இ-சேவை மையத்தால் பாதிப்பு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சார்பில் பொது இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக ஆண்டிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் பொது இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 இ-சேவை மையங்களிலும் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கு மக்கள் அதிகம் வந்து விண்ணப்பித்து வருகிறார்கள்.

வரிசையில் நின்று விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 2 மையங்கள் செயல்பட்டபோதிலும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக ஆண்டிப்பாளையம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் அமைக்கப்பட்ட இ-சேவை மையம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் கூட்டம் முழுவதும் எதிரே உள்ள அரசு கேபிள் டி.வி. வாரியம் மூலம் நடத்தப்படும் இ-சேவை மையத்தில் முண்டியடிக்கிறது.கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்பட பிற சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பது அதிகரித்துள்ள நிலையில் பூட்டியிரும் இ-சேவை மையத்தை திறந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

------------


Next Story