கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கார்கில் தினம் அனுசரிப்பு
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கார்கில் தினம் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வரலாற்று துறை சார்பில் கார்கில் தினம் பள்ளி வளாகத்தில். கடைபிடிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு பள்ளி மாணவிகள் இந்தியா வரைபடத்தை வரைந்து, அதில் 527 ராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் 527 அகல் விளக்கு ஏற்றி இந்தியாவின் பாதுகாப்பிற்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா தலைமை தாங்கினார்.
ஆசிரியை உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் உஷா ஜோஸ்பின், கண்ணன், சீனிவாசன், வரலாற்று துறை ஆசிரியர்கள் பிரியா, சுப்புலட்சுமி, பிரேமா, சகுந்தலா, ஸ்டெல்லா, சாந்தி, உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவிய ஆசிரியர் ஆவுடைத்தாய் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story