அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா
ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.
ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். நகரமன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையாளர் பழனி, நகரமன்ற துணைத்தலைவர் பெ.இந்திரா பெரியார் தாசன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. க.தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விளையாட்டு விழா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து பள்ளி மாணவிகளின் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. அதன் பிறகு மாணவிகளின் பல்வேறு விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவிகளின் சிலம்பம், பிரமிடு காட்சி, நடனம் உள்ளிட்டவைகளை செய்தனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
உடற்கல்வி அலுவலர், ஆசிரியர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.