அரசு மருத்துவக்கல்லூரி பேட்டரி கார் வசதி


அரசு மருத்துவக்கல்லூரி பேட்டரி கார் வசதி
x

அரசு மருத்துவக்கல்லூரி பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நுழைவுவாயிலில் இருந்து மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு வரையும், பின் நுழைவுவாயில் வரையும் இயக்கப்படுகிறது. இதில் நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து எளிதாக பயணம் செய்கின்றனர். இலவச சேவையால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி காரில் பொதுமக்கள் அமர்ந்து பயணம் செய்ததை படத்தில் காணலாம்.


Next Story