தொழில் மையம் மூலம் ரூ.4¾ கோடி கடன் உதவி


தொழில் மையம் மூலம் ரூ.4¾ கோடி கடன் உதவி
x
தினத்தந்தி 31 March 2023 12:30 AM IST (Updated: 31 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் 262 பேருக்கு ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் 262 பேருக்கு ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடனுதவி

நாகை மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கி வருகிறது.

மேலும் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மூலமாக புதிய தொழில் தொடங்குவதற்கும், தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும், தொழில் நிறுவனங்களுக்கான மானியங்களை பெறுவதற்கும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.4 கோடியே 75 லட்சம்

அந்த வகையில் நாகை மாவட்டத்தில் மாவட்டதொழில் மையம் மூலம் 2022-2023-ம் ஆண்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 43 பேருக்கு ரூ.37லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 17 பேருக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டிலும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 137 பேருக்கு ரூ.2 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலும், பாரத பிரதமர் உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் 65 பேருக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 262 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story