அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்ட பணிகள்


அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்ட பணிகள்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:30 AM IST (Updated: 13 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

திருவாரூர்

பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் புதிதாக அமையவிருக்கும் ஊராட்சி செயலக கட்டுமான பணிகள், அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்ட பணிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிவறை கட்டும் பணிகள் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார். அப்போது பெருகவாழ்ந்தான், காந்தாரி, நடுக்கரை குளம் தூர்வாருதல் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல் பணிகள், பிரதமர் வீடு கட்டும் திட்ட பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பாலையூர் ஊராட்சி நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டிடம் கட்டும் பணி, சமையல் கூடம் அமைக்கும் பணி, சி மற்றும் டி வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார். கெழுவத்தூர் ஊராட்சியில் சமையல் கூடம் பழுது நீக்கம் செய்தல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்தல், பிரதமர் வீடு கட்டும் திட்ட பணிகளையும் பார்வையிட்டார். அப்போது ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றியழகன், மாலதி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story