அரசு பள்ளி ஆண்டு விழா
பேராவூரணி அருகே அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பேராவூரணி:
பேராவூரணி அருகே உள்ள படப்பனார்வயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஆண்டுத் திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, வட்டாரவள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பூங்குழலி, ஊராட்சி மன்றத் தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். ஆசிரியை ரூபிலலிதா ஆண்டறிக்கை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர் பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.இதில், பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாணவர்கள் பயன்பாட்டிற்கான ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கணினி வழங்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர்கள் தாமரைச்செல்வன், கண்ணன், நாகராஜன் சந்திரசேகரன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.