அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம்


அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகலில் நேற்று, ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் ஷெர்லின் விமல் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தனது ஊராட்சி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்தமைக்கு, நெகிழி பயன்பாட்டை குறைத்து மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்தியதையும் பாராட்டி நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கிய பசுமை சாம்பியன் விருது ரூ.1 லட்சம் தொகையை ஒன்றியத்திற்கு உட்பட்ட 95 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் புரவலர் நிதியாக தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.


Next Story