அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பாசிப்பட்டினத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 231 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 9 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியையின் செயல்பாடு காரணமாக மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும், பள்ளியை சரியாக பராமரிக்கவில்லை என்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் சார்பில் மாவட்ட கல்வி அதிகாரிக்கு மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர், குழு ஒன்றை நியமித்து இப்பள்ளியை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இந்த குழுவினர் விசாரணை நடத்தி மாவட்ட கல்வி அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதைதொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகங்களை முறையாக வழங்காதது, பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள் நடத்தாதது, பள்ளிக்கு வழங்கப்பட்ட அரசின் நிதியை சரியான முறையில் செலவு செய்யாதது, செலவு செய்த தொகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாதது என்பது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி உத்தரவிட்டார்.