அரசு பள்ளி தலைமையாசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை


அரசு பள்ளி தலைமையாசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

குளித்தலையில் அரசு பள்ளி தலைமையாசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

பள்ளி தலைமையாசிரியர்

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் அருகே உள்ள இமாம் சாஹிப் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 38). இவர் கோட்டமேடு பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நிவேதா (38). இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு லோகித் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் உள்ளனர்.ரவிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து நிவேதா பல நேரங்களில் தனது கணவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

தற்கொலை

இந்தநிலையில் நிவேதா ஜோதிடம் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதுபோல குழந்தைகளும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். மாைலயில் பள்ளி முடிந்த பின்னர் இவர்களது குழந்தைகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரவிக்குமார் வீட்டில் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதன் பின்னர் அங்கு வந்த நிவேதா மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நிவேதா கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story