இடுவம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை


இடுவம்பாளையம் அரசு பள்ளி   மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை
x

இடுவம்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர் மாவட்டம் தெற்கு குறுவள மைய கபடி போட்டி திருப்பூர் சின்னாண்டிபாளையம் பிளாட்டோஸ் அகாடமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியை திருப்பூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. திருப்பூர் மாவட்டம் தெற்கு பள்ளியைச்சேர்ந்த மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். 14 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கும், 16-18 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கும் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பகுதிச் சேர்ந்த மாணவிகளும் பங்கேற்றனர். 18 வயது உட்பட்ட பிரிவில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் வெற்றிபெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர். போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மாணவிகளை இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி பாராட்டி பரிசுகள் வழங்கினார். மேலும் உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.


=============


Next Story