பனிக்கன்குப்பம் பொறியியல் கல்லூரிக்குஅரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்


பனிக்கன்குப்பம் பொறியியல் கல்லூரிக்குஅரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பனிக்கன்குப்பம் பொறியியல் கல்லூரிக்கு அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம் சென்றனா்.

கடலூர்


பண்ருட்டி,

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில், பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதையொட்டி அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத்தின் புல முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். இதில் பண்ருட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் அண்ணா பல்கலைக்கழக துறை தலைவர்கள் சுரேஷ்குமார், சீனிவாசன், ராமச்சந்திரன், மாலா, மங்கையர் கரசி உமா மகேஸ்வரி, நான் முதல்வன் ஒருகிணைப்பாளர் செந்தில்குமார் பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணப்பாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story