அரசு பள்ளி மாணவர்கள் நடைபயணம்


அரசு பள்ளி மாணவர்கள் நடைபயணம்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உலக பாரம்பரிய தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

நீலகிரி

கோத்தகிரி,

ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ந் தேதி உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோத்தகிரி அருகே பனகுடி வனப்பகுதியில் உள்ள வரலாற்று சின்னங்களை பார்வையிட கேசலாடா அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் நடைபயணமாக சென்றனர். அங்கு வரலாற்று சின்னங்களான கல்வட்டம், கற்திட்டைகள், நடுகற்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தொல்லியல் ஆர்வலர் திலீப் சீனிவாஸ், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ராமையா, ஓய்வு பெற்ற வனவர் பாலகிருஷ்னன் ஆகியோர் கலந்துகொண்டு சோலைக்காடுகள், வன உயிரினங்கள், முன்னோர் வழிபாடு, தொல்லியல் சின்னங்கள் குறித்தும், அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை குறித்தும் விளக்கி பேசினர். முடிவில் மாணவர்களுக்கு சிறுதானிய இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தொல்லியல் சின்னங்களை பாதுகாப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story