ஓமலூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் திருட்டு


ஓமலூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் திருட்டு
x

ஓமலூரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்

ஓமலூர்:

அரசு பள்ளி ஆசிரியர்

ஓமலூர் காந்திநகர் ரெயில்வே கேட் அருகே வசித்து வருபவர் பெருமாள். இவருடைய மகன் ராஜசேகரன் (வயது 40). இவர் சிந்தாமணியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனோசித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

ராஜசேகரன் உறவினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை பார்க்க சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் நேற்று மாலை 3 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்பட 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.52 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜசேகரன் ஓமலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து தாரமங்கலம் ரோட்டில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை சென்று, நின்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story