இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
வேடசந்தூர் வேன் டிரைவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
வேடசந்தூர் ஆத்துமேட்டை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 41). வேன் டிரைவர். கடந்த 2018-ம் ஆண்டு இவர், வேனில் மில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு மதுரை-திண்டுக்கல் சாலையில் பிள்ளையார்நத்தம் பிரிவு அருகே சென்று ெகாண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பஸ் திடீரென்று பிரேக் போட்டு நின்றது. அந்த பஸ் மீது வேன் மோதியது. இதில் வேனை ஓட்டி சென்ற கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் அரசு போக்குவரத்து கழகத்தில் இழப்பீடு கேட்டு வேடசந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அவருக்கு, கடந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 190 இழப்பீடு தொகையாக அரசு ேபாக்குவரத்து கழகம் வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதையடுத்து வேடசந்தூர் கோர்ட்டில் நிைறவேற்றுதல் மனு ஒன்றை கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 877 இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கவில்லையென்றால் அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி சரவணகுமார் உத்தரவிட்டார். இந்த நிலையில் இழப்பீடு வழங்காததால் வேடசந்தூர் பஸ்நிலையத்தில் திருச்செந்தூர் செல்ல இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.