விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 16 Feb 2023 9:53 PM IST (Updated: 16 Feb 2023 9:54 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி ெசய்யப்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட மகாஜனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மல்லிகா, மாரி, மஞ்சுளா, செல்வி ஆகிய 4 பேருக்கு ரூ.12 லட்சத்து 36 ஆயிரத்து 575 நஷ்டஈடை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் நஷ்டஈடு வழங்கவில்லை. இதையடுத்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து காஞ்சீபுரத்தில் இருந்து சேலம் செல்லும் அரசு பஸ் செய்யாறு பஸ் நிலையத்துக்கு வந்தது. அந்த பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

இதனை கண்ட பயணிகள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அவர்கள் போக்குவரத்து பணிமனையில் இருந்து வெளியே வரும்போது ஜப்தி செய்யலாம். பயணிகளுடன் செல்லும் பஸ்சை ஜப்தி செய்வது என்ன நியாயம் எனகூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பஸ் மூலம் பயணிகளை அனுப்பி வைத்தனர்.


Next Story