அரசு அலுவலர்கள் விடுப்பில் செல்ல கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் விடுப்பில் செல்ல கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துத்துறைகளின் பணிகளை கலெக்டர் எளிதில் கண்காணிக்கும் பொருட்டும், களப்பணிகளை திடீர் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட அளவிலான அலுவலர்கள், துறை அலுவலர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் விடுப்பில் செல்லும் போது, கலெக்டரிடம் முறையாக அனுமதி பெற்ற பின்பே செல்ல வேண்டும். அனுமதி பெறாமல் தலைமை இடத்தை விட்டு வெளியேறுவது தெரிய வந்தால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story