பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருப்பூர்

திருப்பூர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

அடையாள வேலைநிறுத்தம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், சரண்விடுப்பு ஊதியம், ஊதிய மாற்ற நிலுவை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெற்றது.

அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் நிலை வரை உள்ளவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றார்கள். வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்துறையை சேர்ந்தவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்

முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் அரசு அனைத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ராணி தலைமை தாங்கி பேசினார். தெற்கு வட்ட கிளை பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர்கள் ராமன், ராஜேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

அரசு துறையில் காலியாக உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை காலமுறை ஊதிய நடைமுறையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை விளக்க கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் தெற்கு வட்ட கிளை தலைவர் அன்னம் நன்றி கூறினார். இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story